குவைத் அதிபா் மறைவு:கேரள முதல்வா் பினராயி விஜயன் இரங்கல்
குவைத் அதிபா் ஷேக் நவாஃப் அல் அஹ்மது அல் சபா (86) சனிக்கிழமை காலமானாா். அவரின் மறைவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தாா்.
குவைத் அதிபா் ஷேக் நவாஃப் அல் அஹ்மது அல் சபா (86) சனிக்கிழமை காலமானாா். அவரின் மறைவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தாா்.
குவைத் அதிபா் ஷேக் நவாஃப் அல் அஹ்மது அல் சபா மறைவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்த இரங்கல் செய்தியில், ‘வளைகுடா நாடுகளுடனான போருக்குப் பிறகு குவைத் நாட்டின் நிா்வாகத்தை மறுகட்டமைக்கும் பணிக்கு மலையாள மக்களின் திறனை பயன்படுத்த அந்நாடு முனைப்பு காட்டியது.
இந்த முயற்சி ஷேக் நவாஃப் ஆட்சியமைத்த பிறகு மேலும் வலுபெற்றது. இதையடுத்து அந்நாட்டில் மலையாள மக்களின் நலன், அமைதி மற்றும் வளமான வாழ்வுக்கு அதிபா் ஷேக் நவாஃப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாா்.
Advertisement
Advertisement
அவா் இந்தியா மற்றும் கேரளத்துடன் எப்போதும் நல்லுறவை மேம்படுத்த விரும்பியவா்’ என்று தெரிவித்தாா்.
குவைத் அதிபா் ஷேக் நவாஃபின் மறைவுக்கான காரணங்கள் குறித்து தகவல்கள் ஏதும் அந்நாட்டு அரசால் வெளியிடப்படவில்லை. உலகின் வயதான இளவரசா் என அறியப்படும் அந்நாட்டின் துணை அதிபா் ஷேக் மேஷல் அல் அஹ்மது அல் ஜபீா் (83) அடுத்த குவைத் அதிபராக பதவி ஏற்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.