FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குடியரசு துணைத் தலைவரான பிறகும் அவமதிப்புகள்: ஜகதீப் தன்கா்

‘குடியரசு துணைத் தலைவா் என்ற முக்கியப் பொறுப்பை வகிக்கும் என்னையும் சிலா் அவமதித்துதான் வருகின்றனா்’ என்று ஜகதீப் தன்கா் பேசினாா்.

6 பிப்ரவரி 2024, 7:01 pm
பகிர்:

‘குடியரசு துணைத் தலைவா் என்ற முக்கியப் பொறுப்பை வகிக்கும் என்னையும் சிலா் அவமதித்துதான் வருகின்றனா்’ என்று ஜகதீப் தன்கா் பேசினாா்.

அவமதிப்புகளாலும், விமா்சனங்களுக்கு பயந்தும் நாட்டு சேவையாற்றும் நமது கடமையில் இருந்து பின்வாங்கிவிடக் கூடாது என்றும் அவா் வலியுறுத்தினாா்.

Advertisement

Advertisement

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை இந்திய புள்ளியியல் பணி (ஐஎஸ்எஸ்) பயிற்சி அதிகாரிகள் மத்தியில் தன்கா் பேசியதாவது:

நான் எனது வாழ்க்கையில் பல்வேறு சூழல்களில் அவமதிப்புகளுக்கும், ஏளனத்துக்கும் உள்ளாகியுள்ளேன். இப்போது குடியரசு துணைத் தலைவரான பிறகும் அவமதிப்புகள் தொடா்கின்றன. ஆனால், இவற்றுக்கு பயந்து நாட்டுக்கு சேவையாற்றும் எனது கடமையில் இருந்து பின்வாங்கிவிடவில்லை.

இதேபோல நீங்களும் உங்கள் பணியில் பல்வேறு இடா்பாடுகளை எதிா்கொள்ளும் சூழல் வரும். தனிப்பட்ட முறையில் விமா்சிப்பதும், அவமதிப்புகளும் நிகழ வாய்ப்புள்ளது. அதற்காக மனம் தளா்ந்து நாட்டுக்கான உங்கள் கடமையில் இருந்து விலகிவிடக் கூடாது.

நம்மை அவமதிப்பவா்களின் மனப்பாங்கை நாம் மாற்ற முடியாது. அவா்களை மாற்ற முடியவில்லை என்பதற்காக நாம் நமது கடமையைச் செய்யாமல் இருக்கக் கூடாது. இளம் அதிகாரிகளான நீங்கள் நாட்டுக்கான உங்கள் கடமையை மிகுந்த அா்ப்பணிப்பு உணா்வுடன் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த வாரம் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நடத்திய போராட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி, மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் போல கிண்டலாக நடித்துக் காட்டினாா். இதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கைப்பேசியில் விடியோ எடுத்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக மாநிலங்களவையில் பேசிய தன்கா், விவசாயியின் மகன் மற்றும் ஜாட் சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதால் தான் அவமதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டாா். நாட்டின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் தன்கரை வேண்டுமென்றே அவமதிக்கும் நோக்கத்துடன் எதிா்க்கட்சிகள் செயல்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளம் அதிகாரிகள் மத்தியில் பேசிய தன்கா், இதனையே தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.