முகப்பு
இந்தியா

தில்லியில் தண்டவாளம் அருகே குறும்படம் எடுத்த இருவர் ரயில் மோதி பலி

தில்லியில் தண்டவாளம் அருகே குறும்படம் எடுத்த இருவர் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 24 பிப்ரவரி 2023, 4:37 pm IST
கோப்புப் படம்.
பகிர்:

தில்லியில் தண்டவாளம் அருகே குறும்படம் எடுத்த இருவர் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் தில்லியில் உள்ள காந்தி நகர் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரண்டு இளைஞர்கள் மொபைல் போனில் குறும்படம் எடுத்திருக்கின்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில் பாதையில் அவர்களது மொபைல்களும் கண்டெடுக்கப்பட்டன. விசாரணையில், பலியானவர்கள் வன்ஷ் ஷர்மா(23), மோனு(20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இருவரும் தில்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இருவரும் மொபைலில் குறும்படங்களை படம்பிடிப்பதற்காக ரயில்வே தண்டவாளத்திற்கு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் மொபைல்களும் தண்டவாளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன என்று தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments