ராகுல் காந்தி அவதூறு வழக்கில் பாஜக எம்எல்ஏ கேவியட் மனு தாக்கல்!
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கைத் தொடர்ந்த குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கைத் தொடர்ந்த குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தண்டனையை நிறுத்தக்கோரி ராகுல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ஜூலை 7-ம் தேதி குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் ராகுல் காந்தி மீது 10-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளதால் சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பு சரியானதுதான் என்று அந்த தீர்ப்பில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்கலாம்: சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நானி?
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கும் முன் தனது வாதத்தையும் கேட்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.