FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்!

அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்றும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

Updated On : 14 மார்ச் 2023, 10:49 am IST
பகிர்:

அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்றும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் பாதியிலேயே விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலமுறை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால், நாடாளுமன்றத்தில் விவாதிக்க அவைத் தலைவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில், பட்ஜெட் தொடரின் இரண்டாவது பாதி நேற்று தொடங்கிய நிலையில் மீண்டும் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தை அவைகளில் எழுப்பியதால் நாள் முழுவதும் அவைகள் முடங்கியது.

தொடர்ந்து இரண்டாவது நாளாக அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு நியமிப்பது குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், பிஆர்எஸ் எம்.பி. கேஷவ் ராவ் மக்களவையிலும், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி உள்ளிட்டோர் மாநிலங்களவையிலும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

அதேபோல், அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்துவது குறித்து விவாதிக்க கோரி மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் நோட்டீஸ் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments