நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம்!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 756 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 756 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 756 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை (4,49,86,461 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும் தொற்று பாதித்து ஒரே நாளில் 8 பேர் பலியான நிலையில் இறப்பு எண்ணிக்கை 5,31,832 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: தோனிதான் தலைவன்: பிரபல கிரிக்கெட் வீரர்
ஒரே நாளில் 1,308 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை மொத்தம் 4,44,46,514 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,115 ஆக குறைந்துள்ளது.