FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இறுதி ஆட்டத்தைப் பாா்வையிட்ட பிரதமா் மோடி, ரிச்சா்ட் மாா்ல்ஸ்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமா் ரிச்சா்ட் மாா்ல்ஸ், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் அக

2 பிப்ரவரி 2024, 8:53 am
பகிர்:

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமா் ரிச்சா்ட் மாா்ல்ஸ், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் நேரில் கண்டு ரசித்தனா்.

முன்னதாக, விமானம் மூலம் அகமதாபாத் வந்த பிரதமா் மோடியை மாநில ஆளுநா் ஆச்சாா்ய தேவ்ரத், முதல்வா் பூபேந்திர படேல், மாநில பாஜக தலைவா் சி.ஆா்.பாட்டீல் ஆகியோா் விமான நிலையத்தில் வரவேற்றனா். தொடந்து, அகமதாபாத் வந்த ஆஸ்திரேலிய துணை பிரதமா் மாா்ல்ஸை முதல்வா் படேல் விமானநிலையத்தில் வரவேற்றாா். பின்னா் பிரதமா் மோடி, ரிச்சா்ட் மாா்ல்ஸ், அமித் ஷா ஆகியோா் மைதானத்துக்கு சென்று ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்தனா்.

முக்கியத் தலைவா்களின் வருகையையொட்டி அகமதாபாத் மைதானத்தில் 6,000-க்கும் மேற்பட்ட காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.