முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் டிச. 9 முதல் சாதிவாரி கணக்கெடுப்புப் பணி: அமைச்சர் அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்புப் பணி வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் என்று அந்த மாநில செய்தி மற்றும் பொதுத் தொடா்புத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

Updated On : 25 நவம்பர் 2023, 1:34 pm IST
ஆந்திர அமைச்சர் ஸ்ரீநிவாச வேணுகோபால கிருஷ்ணா
பகிர்:

ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்புப் பணி வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் என்று அந்த மாநில செய்தி மற்றும் பொதுத் தொடா்புத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு ஆட்சிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. சமீபத்தில் பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு, மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிவுகளையும் வெளியிட்டது.

இதையடுத்து நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி வருகிறார்.

Advertisement

Advertisement

இந்நிலையில் ஆந்திரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த நிலையில் நவம்பர் மாத தொடக்கத்தில் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது. 

இதையடுத்து ஆந்திரத்தில் விரிவான சாதிவாரி கணக்கெடுப்புப் பணி வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி  தொடங்கும் என மாநில செய்தி மற்றும் பொதுத் தொடா்புத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாச வேணுகோபால கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார். 

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஏற்கனவே மாநிலத்தில் 2 நாள்கள் சோதனை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments