ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவின் பள்ளிக் கட்டணம் இவ்வளவா?
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சானின் மகள் ஆராத்யா தற்போது ஏழாம் வகுப்பு படிக்கிறார். அவரது பள்ளிக் கட்டணம் தொடர்பான விவரங்கள் திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை: ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சானின் மகள் ஆராத்யா தற்போது ஏழாம் வகுப்பு படிக்கிறார். அவரது பள்ளிக் கட்டணம் தொடர்பான விவரங்கள் திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடுத்தரக் குடும்பத்தினரே கடன் வாங்கியாவது பிள்ளைகளை சர்வதேச பள்ளியில் படிக்க வைக்கும்போது, சர்வதேச அளவில் பிரபலங்களாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சானின் மகளான ஆராத்யாவின் கல்விக் கட்டணத்தை சொல்லவா வேண்டும்?
என்றாலும் கூட பாருங்கள்.. பலருக்கும் அவரது பள்ளிக் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பதில் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது.
Advertisement
Advertisement
இவர்களது மகள், இந்தியாவிலேயே மிக மிக பிரபலமான பள்ளி ஒன்றில்தான் படிக்கிறார். அது என்னவென்று பலருக்கும் தெரியும்.. மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி தான் அது. அம்பானி குடும்பத்துக்குச் சொந்தமானது இந்தப் பள்ளி என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
இங்குதால் ஆராத்யா எல்கேஜி முதல் படித்து வருகிறார். தற்போது ஏழாம் வகுப்பில் படித்து வரும் அவர் அப்பள்ளியில் பல்வேறு சிறப்பு வகுப்புகளிலும் இடம்பெற்று வருகிறார். அதன்படி, அவருக்கு மாதக் கட்டணமாக ரூ.1.70 லட்சம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
ஆராத்யா மட்டுமல்ல இப்பள்ளியில் பயிலும் நட்சத்திரங்களின் பிள்ளைகளின் பெயர்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆம், ஷாருக்கான் மற்றும் கௌரிகான் பிள்ளைகள், அப்ராம் கான் மற்றும் சுஹானா கான், அமீர்கான் பிள்ளைகளும் இங்குதான் பயில்கிறார்கள்.
இவர்கள் மட்டுமல்லாமல் ஜான்வி கபூர், சரா அலி கான், சச்சின் மகள் சாரா டெண்டுல்கர், நைசா தேவ்கன், அனன்யா பாண்டே உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் இங்குதான் பயின்றவர்கள்.
மீண்டும் ஆராத்யா விவகாரத்துக்கே வருவோம். கடந்த 2007ஆம் ஆண்டு ஐஸ்வர்யா -அபிஷேக் திருமணம் நடந்தது. 2011ஆம் ஆண்டு ஆராத்யா பிறந்தார். பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா வெகுவாகப் பாராட்டப்பட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.