நடனமாடி பிரசாரம் செய்த அசாம் முதல்வர்!
தேர்தல் பிரசாரத்தின்போது அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மேடையில் நடனமாடி மக்களை உற்சாகப்படுத்தினார்.
அசாமின் ஜோர்ஹாட்டில் உள்ள திடாபோர் போகாஹோலா பாகிசாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மேடையில் நடனமாடி மக்களை உற்சாகப்படுத்தினார்.
ஜோர்ஹாட் நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர் தோபோன் குமார் கேகோயை ஆதரித்து பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
முதல்வர் சர்மா பிரபலமான ஜுமுர் பாடலுக்கு உற்சாகமாக கைதட்டி நடனமாடினார். மக்களவைத் தேர்தலில் அசாமில் மொத்தமுள்ள 14 இடங்களில் பாஜக 11 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான அசோம் கண பரிஷத்(ஏஜிபி) 2 இடங்களிலும், பார்பேட்டா மற்றும் துப்ரி, யுபிபிஎல் ஆகிய கட்சிகள் ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றனர்.
Advertisement
Advertisement
அசாமில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.