FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அயோத்தி ராமர் கோயிலில் காத்திருக்கிறது மிக அரிய நிகழ்வு

ராமநவமி நாளில் அயோத்தி ராமர் கோயிலில் மிக அரிய நிகழ்வு காத்திருக்கிறது.

Updated On : 9 ஏப்ரல் 2024, 5:50 pm IST
அயோத்தி ராமர் கோயில்
பகிர்:

அயோத்தி ராமர் கோயிலில், ராம நவமி தினமான ஏப்ரல் 17ஆம் தேதி, ராமரின் நெற்றியில், சூரிய ஒளிக்கதிர் பட்டு சூரிய திலகம் எனப்படும் நிகழ்வு நடந்தேறவிருக்கிறது.

அறிவியல், கட்டடவியல் அனைத்தும் ஒன்றிணைத்து, ஆன்மிகச் சிந்தனையை அதிகரிக்கும் வகையில், ராம நவமி நாளில் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு, காணக் கிடைக்காத இந்த சூரிய திலக தரிசனம் கிடைக்கவிருக்கிறது.

ஆன்மிக ரீதியாகவும், அதே வேளையில், அறிவியலுடன், கட்டட அமைப்பும் ஒருங்கிணைந்து, கோயில் அறக்கட்டளையுடன் விஞ்ஞானிகள் இணைந்து, ராமரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ராமநவமி நாளில் மட்டும் சூரிய ஒளிக்கதிர் ராமரின் நெற்றியில் திலகம் போல படுமாறு கண்ணாடிகள், லென்ஸ்கள் கொண்ட வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வட இந்தியர்களால் அதிகம் கொண்டாடப்படும் ராமநவமி, ஏப்ரல் 17ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அன்றைய நாள் சூரிய ஒளிக்கதிர், அயோத்தி ராமர் கோயிலில் உள்ள கருவறைக்குள் வீற்றிருக்கும் பால ராமர் மீது நான்கு நிமிடங்கள் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் பாதையை துல்லியமாகக் கணித்து, அன்றைய நாள், எந்த இடத்தில் சூரியன் பயணிக்கும் என்பதை கண்டறிந்து, இந்த செயல்முறை அமைக்கப்பட்டிருப்பதாகவும், மூன்றாவது தளத்திலிருந்து சூரிய ஒளிக்கதிர், கருவறைக்குள் இருக்கும் பால ராமர் மீது விழும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

சூரியக் கதிர்களை விட, மிகப்பெரிய வாழ்த்து பாலராமருக்கு வேறு என்னவாக இருந்துவிடப் போகிறது என்கிறார்கள் கோயில் நிர்வாகிகள். அதிலும், மிகச் சரியாக பாலராமரின் நெற்றியில் திலகம் போல சூரிய ஒளிக்கதிர் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments