முகப்பு
இந்தியா

ராணுவ மருத்துவ சேவை தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நியமனம்

மருத்துவ சேவை (ராணுவ) தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Updated On : 1 ஆகஸ்ட் 2024, 4:00 pm IST
லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா
பகிர்:

லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் மருத்துவ சேவைகள் (இராணுவம்) தலைமை இயக்குநராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இதன் மூலம், ராணுவத்தின் மருத்துவ சேவைகள் பிரிவின் தலைமை இயக்குநராக பொறுப்பேற்ற முதல் பெண் என்ற வரலாற்றை படைத்துள்ளார்.

சாதனா சக்சேனா நியமனம் இந்திய ராணுவ வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக மாறியிருக்கிறது.

Advertisement

Advertisement

முன்னதாக, ஏா் மாா்ஷல் சாதனா சக்சேனா நாயா் ராணுவத்தின் மருத்துவமனை சேவைகள் (ஆயுதப் படை) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டிருந்தார். அப்பதவியை வகித்த முதல் பெண் என்ற பெருமையை அவர் படைத்திருந்தார்.

லெப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா புணேயில் உள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று 1985-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையில் சோ்ந்தாா். குடும்ப மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற இவா், தில்லி எய்ம்ஸில் 2 ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளாா்.

மேற்கு விமான மற்றும் பயிற்சிப் படையின் முதன்மை மருத்துவ அதிகாரியாக பணியாற்றிய முதல் மற்றும் ஒரே பெண் அதிகாரி என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.

சாதனா சக்சேனா, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு ஆயுதப் போர் பயிற்சியும் சுவிஸ் ஆயுதப் படைகளுடன் இணைந்து இராணுவ மருத்துவ நெறிமுறைகளிலும் பயிற்சி பெற்றவர்.

இவா் விமானப் படையின் விசிஷ்ட சேவா விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளாா். இவரின் கணவா் கே.பி.நாயா் ஏா் மாா்ஷலாக பதவி வகித்து ஓய்வுபெற்றவா். எனவே இவா்கள் விமானப் படையில் ஏா் மாா்ஷலாக பதவி வகித்த முதல் மற்றும் ஒரே தம்பதி என்ற பெருமையையும் வகித்திருந்தனர்.

கடந்த ஆண்டு ஏா் மாா்ஷலாக சாதனா சக்சேனா பதவி உயா்த்தப்பட்டு ஆயுதப்படையின் மருத்துவமனை சேவைகள் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டதாக இந்திய விமானப் படை அறிவித்தது. இதன்மூலம் இப்பதவியை வகித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றிருந்ததோடு, விமானப் படையில் தொடா்ச்சியாகப் பணியாற்றி ஏா் மாா்ஷலாகப் பதவி உயா்த்தப்பட்ட இரண்டாவது பெண் அதிகாரி என்ற பெருமையையும் அப்போது இவா் பெற்றிருந்தார்.

விமானப் படையில் பெண் ஏா் மாா்ஷலாக முதன்முறையாக பதவி உயா்த்தப்பட்டவா், ஓய்வுபெற்ற பெண் அதிகாரி பத்மா பந்தோபத்யாய ஆவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments