FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் மீது அதிகாலையில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு

இன்று(ஆக. 11) அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை

Updated On : 11 ஆகஸ்ட் 2024, 9:10 am IST
- கோப்புப்படம் | பிடிஐ
பகிர்:

ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் இன்று(ஆக. 11) அதிகாலை பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை மூண்டுள்ளது.

அம்மாவட்டத்திற்கு உள்பட்ட நௌனட்டா, நாகேனி பேயாஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாய் கிடைத்த தகவலின் அடிப்படையில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையுடன் இணைந்து காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பாதுகாப்புப் படை தரப்பிலிருந்து பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா உள்ளிட்ட விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments