முகப்பு
இந்தியா

சிறந்த பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலை. தேர்வு!

2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட், 2024 at 12:41 PM
அண்ணா பல்கலைக்கழகம் (கோப்புப்படம்)
பகிர்:

2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று(ஆக. 12) வெளியிட்டுள்ளது.

சிறந்த கல்வி நிறுவனம், பல்கலைக்கழகம் என 16 பிரிவுகளில் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.

மாநில பல்கலைக்கழகங்கள், திறன் பல்கலைக்கழகங்கள், திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் என 3 புதிய பிரிவுகளில் இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் ஒட்டுமொத்த பிரிவில் நாட்டில் சிறந்த கல்வி நிறுவனமாக தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. ஐஐடி பெங்களூரு, ஐஐடி மும்பை முறையே 2, 3 ஆம் இடங்களைப் பெற்றுள்ளன.

பொறியியல் துறையிலும் ஐஐடி சென்னை முதலிடம், ஐஐடி தில்லி இரண்டாமிடம், ஐஐடி மும்பை மூன்றாமிடம்.

அதுபோல, 2024 ஆம் ஆண்டுக்கான மாநில பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில்் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது.

மருத்துவத் துறையில் தில்லி எய்ம்ஸ் முதலிடம் பெற்றுள்ளது. சண்டீகர் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டாமிடமும் வேலூர் சிஎம்சி மூன்றாமிடமும் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.