ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டம் dotcom
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டம்: கார்கே, ராகுல் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ளனர்.

ஜம்மு -காஷ்மீருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு கூட்டணி குறித்து முடிவு செய்ய சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபரூக் அப்துல்லாவின் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என்றும் பேசப்படுகிறது.

இதையடுத்து, ஸ்ரீநகரில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் மற்றும் ஜம்மு- காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஜம்மு -காஷ்மீருக்கு வருகிற செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப்டம்பர் மாத பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

இந்திய மக்களின் இழப்பில் பெரும் பணக்காரர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்! டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

நிலநடுக்கத்தால் கிழக்கு ஆப்கன் கிராமங்கள் தரைமட்டம்! உதவி கோரி மக்கள் கதறல்!!

தித்திக்குதே.... அவ்னீத் கௌர்

அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்திய - ரஷிய உறவு! புதின் பேச்சு

SCROLL FOR NEXT