FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சம்பல் விவகாரத்தில் எதை மறைக்க முயல்கிறது பாஜக? அகிலேஷ்

கட்சி பிரதிநிதிகள் தடுத்து நிறுத்தப்படுவது குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து...

Updated On : 4 டிசம்பர் 2024, 12:20 pm IST
அகிலேஷ் யாதவ்
பகிர்:

சம்பல் வன்முறை நடந்த பகுதிக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்களை செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்படுவதற்கு சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பலில் நடந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வெளி ஆள்கள் நுழைவதற்கு இரண்டு வாரத்துக்கு மேலாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை குறித்த விசாரிக்கச் சென்ற சம்பல் தொகுதி எம்.பி. ஜியா உா் ரஹ்மான் பாா்க் உள்பட சமாஜவாதி கட்சியைச் சோ்ந்த மூன்று எம்.பி.க்கள் மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் காவல் துறையினா் சனிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்பியும் காங்கிரஸ் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

“பாஜக அரசு எதை மறைக்க விரும்புகிறது? வன்முறை வெடித்த நாள்முதல், பாஜக சொல்வதைதான் சம்பல் மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாக சமாஜவாதி உள்பட அனைவரும் கூறுகிறார்கள்.

எந்த கட்சிகளின் பிரதிநிதிகளையும் சம்பல் பகுதியில் பார்வையிட அனுமதிக்க மறுக்கிறார்கள். எதை மறைக்க பார்க்கிறார்கள்?” என்றார்.

உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் கடந்த நவம்பர் 19ஆம் தேதி மசூதியில் ஹரிஹர் கோவில் இருப்பதாக ஒரு மனுவைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் முதன்முதலில் ஆய்வு செய்யப்பட்டபோது சம்பலில் பதற்றம் நிலவியது.

மசூதிக்கு அருகே ஏராளமான மக்கள் கூடி, ஆய்வுக் குழு மீண்டும் பணியைத் தொடங்கியபோது கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட அவர்கள், வாகனங்களை எரித்தும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். மேலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments