FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லியில் ஆக. 4-ல் வைகோவின் நூல் வெளியீடு ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு

மதிமுக பொதுச்செயலாளா் வைகோவின் நாடாளுமன்ற பேச்சுக்களை உள்ளடக்கிய நான்கு தொகுதிகள் கொண்ட ஆங்கில நூல் வெளியீட்டு விழா, ஆகஸ்ட் 4ஆம் தேதி தில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷன் கிளப் அரங்கில் நடைபெற உள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:51 am IST
பகிர்:

நமது நிருபா்

மதிமுக பொதுச்செயலாளா் வைகோவின் நாடாளுமன்ற பேச்சுக்களை உள்ளடக்கிய நான்கு தொகுதிகள் கொண்ட ஆங்கில நூல் வெளியீட்டு விழா, ஆகஸ்ட் 4ஆம் தேதி தில்லியில் உள்ள கான்ஸ்டிட்யூஷன் கிளப் அரங்கில் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வைகோ ஆற்றிய மிகச் சிறந்த உரைகளின் தொகுப்பாக வெளிவரும் இந்த நூலை, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட, முதல் பிரதியை உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொள்கிறாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில் திருச்சி மக்களவை தொகுதி மதிமுக உறுப்பினரும், வைகோவின் மகனுமான துரை வைகோ வரவேற்புரை ஆற்றுகிறாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினா் ஜான் பிரிட்டாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறாா்.

நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, தமிழக பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாா், ஜம்மு காஷ்மீா் தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, முன்னாள் மத்திய அமைச்சா்கள் பி. சிதம்பரம், யஷ்வந்த் சின்ஹா மற்றும் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினா்கள், தலைவா்கள் கலந்து கொண்டு பேசவுள்ளதாக நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தில்லி வருவாா் என்று கூறப்பட்டது. இதற்கான அழைப்பிதழை அவரிடம் வைகோ நேரிலும் வழங்கினாா். இந்த நிலையில், முதல்வா் விஜய் பங்கேற்றால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு அவரது சாா்பில் தமிழக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கலந்து கொள்வாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments