இந்தியா

8 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்து கொலை!

வாரணாசியில் சிறுமியை பாலியல் சீண்டல் செய்து, கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

DIN

வாரணாசியில் சிறுமியை பாலியல் சீண்டலில், கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் வாரணாசியில் ஒரு பள்ளியருகே 8 வயது சிறுமி ஒருவர் அரை நிர்வாணமாக, இறந்த நிலையில் சாக்குப்பையில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியிலிருந்த பல சிசிடிவி கேமராக்களிலும் காவல்துறையினர் சோதனை செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால், விசாரணை கடினமாக இருந்ததாகக் கூறினர். இருப்பினும், ஒரு சிசிடிவி காட்சியில் சிறுமி பதிவாகியிருப்பது தெரிய வந்தது.

அந்த சிசிடிவி காட்சியில், சிறுமியைப் பின்தொடரும் ஒருவர், திரும்பி வருகையில் கையில் ஒரு சாக்குப் பையுடன் வருவது தெரிகிறது. விசாரணையில், சிறுமியை பின்தொடர்ந்தவர் இர்ஷாத் என்பவர் கண்டறியப்பட்டு, அவரை கைது செய்ய சென்றபோது, காவல்துறையினர் மீது இர்ஷாத் துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டார்.

இருப்பினும், இர்ஷாத் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கொசுவர்த்தி வாங்குவதற்காகச் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன், சிறுமி சப்தமிட்டு கூச்சலிட்டதால் கொலை செய்ததும் தெரிய வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT