பி.எஸ்.எல்.வி. சி -60: விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்தன - இஸ்ரோ
ராக்கெட் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
பி.எஸ்.எல்.வி. சி -60 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
ஸ்பேஸ்டெக் -ஏ, ஸ்பேஸ்டெக் - பி ஆகிய இரு விண்கலன்கள் திட்டமிட்டபடி ராக்கெட்டில் இருந்து பிரிந்ததாகவும், அதன் செயல்பாடுகள் திட்டமிட்டபடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் வி்ண்வெளி ஆய்வு மைய 2வது தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வெற்றிகரமாக இன்று (டிச. 30) விண்ணில் செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுவதால், இஸ்ரோ வரலாற்றில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்திய ஆய்வு மையத்தை 2035 - க்குள் விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி -60 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், ராக்கெட்டில் இருந்த நான்கு அடுக்குகளும் சரியாக ராக்கெட்டில் இருந்து பிரிந்தன. மூன்று அடுக்குகள் பிரிந்த நிலையில், நான்காவது அடுக்கில் இருந்த இரு விண்கலன்கள் வெற்றிகரமாகப் பிரிந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.