முகப்பு
இந்தியா

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரிய மனு தள்ளுபடி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Updated On : 29 பிப்ரவரி 2024, 6:48 pm IST
பகிர்:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 2020-இல் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது.

ஆலை நிர்வாகம் தரப்பில் , "ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்கத் தயாராக உள்ளது. ஆனாலும், அரசியல் காரணத்துக்காக அதைத் திறக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது' என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (பிப். 29 )தள்ளுபடி செய்துள்ளது.

"ஸ்டெர்லைட் ஆலையால் செய்யப்பட்ட விதிமீறல்கள் அடைப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை காப்பது மாநில அரசின் முக்கியப் பணிகளில் ஒன்று. ஆலை தொடர்ந்து மாசுபடுத்தி வந்துள்ளது. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட விரும்பவில்லை" என்று உச்ச நீதிமன்ற அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடந்த கடுமையான போராட்டங்கள் அதன் காரணமாக எழுந்த வன்முறையைத் தொடர்ந்து கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments