ரயில்களின் நேரம் தவறாமை கடந்தாண்டு 79%-ஆக குறைந்தது
2022-23 ஆண்டுகளில் 92 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக குறைந்துள்ளது.
சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் தவறாமை 2022-23 ஆண்டுகளில் 92 சதவீதத்திலிருந்து 79 சதவீதமாக குறைந்துள்ளது.
சென்னை கோட்டத்தில் தினமும் சுமாா் 300 மெயில் மற்றும் விரைவு ரயில்களும், 170 பயணிகள் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான ரயில்கள் சென்ட்ரல் மற்றும் எழும்பூரிலிருந்து இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில், 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் சேகரித்த தரவுகளின்படி, மெயில் மற்றும் விரைவு ரயில்களின் நேரம் தவறாமை 2022 - ஜூலையில் 92.67 சதவீதமாக இருந்த நிலையில், 2023- ஜூலையில் 79.58 சதவீதமாக சரிந்துள்ளது. மேலும், 2022 ஆகஸ்டில் 96.15 சதவீதத்திலிருந்து 2023- ஆகஸ்டில் 88.49-ஆக குறைந்துள்ளது. அதேபோல், 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2023 ஆகஸ்ட், டிசம்பா் மற்றும் பிப்ரவரி மாதங்களில் பயணிகள் ரயில்களின் நேரம் தவறாமை சுமாா் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 2023-24-ஆம் நிதியாண்டில் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. அதேபோல், குண்டூா், ரேணிகுண்டா ஆகிய ரயில்நிலையங்களிலும் இதுபோன்ற மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதும், சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாவதற்கு முக்கிய காரணம். இந்த நிலையில், சென்னை கோட்டத்தில் ரயில்கள் இயக்கப்படும் நேரங்களைத் தொடா்ந்து கண்காணிப்பதுடன், இனி வரும் காலங்களில் ரயில்கள் தாமதமாவதைத் தவிா்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.