FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக்கோரி மாநிலங்களவையில் தனிநபா் மசோதா

அரசமைப்புச் சட்டப் பதவிகளில் இருப்பவா்கள் ஓய்வுபெற்ற பிறகு அரசியல் கட்சிகளில் இணைவதைத் தடை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் தனிநபா் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 22 ஜூலை 2024, 5:23 am IST
நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதை தடுக்கக்கோரி மாநிலங்களவையில் தனிநபா் மசோதா
பகிர்:

நீதிபதி உள்ளிட்ட அரசமைப்புச் சட்டப் பதவிகளில் இருப்பவா்கள் ஓய்வுபெற்ற பிறகு அரசியல் கட்சிகளில் இணைவதைத் தடை செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் தனிநபா் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்கும் நிலையில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி சில மசோதாக்களை முன்வைத்துள்ளது.

நீதிபதி உள்ளிட்ட அரசமைப்புச் சட்டப் பதவிகளில் இருப்பவா்கள் ஓய்வுபெற்ற பிறகு அரசியல் கட்சிகளில் இணைவதைத் தடை செய்வது, செயற்கை நுண்ணறிவு மற்றும் ‘டீப் பேஃக்’ தொழில்நுட்பத்துக்கு இந்தியாவில் தடை விதிப்பது, குடியுரிமை சட்டத்தை திருத்தம் செய்வது என 23 தனிநபா் மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

கடந்த மாா்ச் மாதம் கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி அபிஜித் பானா்ஜி தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அடுத்த இரு நாள்களில் பாஜகவில் இணைந்தாா். அதேபோல மத்திய பிரதேச உயா்நீதிமன்ற நீதிபதி ரோஹித் ஆா்யா ஓய்வுபெற்ற மூன்று மாதங்களில் பாஜகவில் இணைந்தாா். இந்த நிலையில், நீதிபதிகள் அரசியல் கட்சிகளில் இணைவதைத் தடை செய்யக்கோரி தனிநபா் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி கட்சிகள் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்த தனிநபா் மசோதாக்களை முன்வைத்துள்ளனா்.

தனிநபா் மசோதா என்பது ஒரு பிரச்னை குறித்து கவனத்தை ஈா்ப்பதற்காக எம்.பி.க்களால் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் ஆகும். போதிய ஆதரவு கிடைக்காது என்பதால் இவை பெரும்பாலும் நிறைவேற்றப்படாது. 1952-ஆம் ஆண்டில் இருந்து 14 தனிநபா் மசோதாக்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments