FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: ஆக.12-ல் விசாரணை!

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு.

Updated On : 26 ஜூலை 2024, 3:16 pm IST
ராகுல் காந்தி
பகிர்:

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான அவதூறு கருத்துகள் தொடர்பான வழக்கில் ராகுல் காந்தி இன்று காலை சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பாஜகவைச் சோ்ந்த விஜய் மிஸ்ரா சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

இந்த குற்றச்சாட்டுகளை ராகுல் மறுத்துள்ளார். அரசியல் காரணங்களுக்கானவும், தன் பெயரைக் கெடுக்கும் நோக்கத்திற்காகவும் புனையப்பட்ட வழக்கு என்று அவர் கூறினார். மேலும் நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments