FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

100 கோடியைத் தாண்டிய மொபைல் நெட்வொர்க் மாற்றுவதற்கான கோரிக்கை

மொபைல் எண் நெட்வொர்க்கை மாற்றுவதற்கான கோரிக்கைகள் 100 கோடியைத் தாண்டிவிட்டதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 26 ஜூலை 2024, 9:43 pm IST
மொபைல்(கோப்புப் படம்)
பகிர்:

மொபைல் எண் நெட்வொர்க்கை மாற்றுவதற்கான கோரிக்கைகள் 100 கோடியைத் தாண்டிவிட்டதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மொபைல் எண் போர்ட்டபிலிட்டி சேவை(Mobile Number Portability service) என்பது மொபைல் எண் வாடிக்கையாளர் ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாறுவது ஆகும். அவ்வாறு மாறும்போது வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே பயன்படுத்திய மொபைல் எண்ணையே தக்கவைத்துக்கொள்ள முடியும்.

இந்த சேவை ஜனவரி 20, 2011ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 6ஆம் தேதியுடன் மொபைல் எண் நெட்வொர்க்கை மாற்றுவதற்கான கோரிக்கைகள் 100 கோடியைத் தாண்டிவிட்டன என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

மேலும் இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1.1 கோடி மொபைல் எண் நெட்வொர்க் மாற்றுவதற்கான கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக டிராய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நாட்டின் முன்னணி நிறுவனங்கள், தொலைப்பேசிக்கான ரீசார்ச் தொகையை 27 சதவிகிதம் வரை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments