FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கேரளம் எனப் பெயர் மாற்றம் செய்யும் மசோதா மக்களவையில் அறிமுகம்!

கேரளம் என மாற்றுவதற்கான மசோதாவை மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தியது பற்றி..

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 1:42 pm IST
மக்களவை - file photo
பகிர்:

கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கான மசோதாவை மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தியது.

பெயர் மாற்றம் தொடர்பான மாநிலச் சட்டப்பேரவையின் தீர்மானத்தைக் கேரள அரசு ஜூன் 2024-இல் மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது.

அதனைத் தொடர்ந்து, இந்தியக் குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை மாநிலச் சட்டப்பேரவையின் கருத்துகளைப் பெறுவதற்காக அனுப்பினார். பின்னர், மாநிலச் சட்டப்பேரவையில் அம்மசோதாவை ஏற்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.

Advertisement

Advertisement

பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் 'கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026-ஐ அறிமுகப்படுத்தினார்.

கேரள மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகளை 'கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026' வழங்குகிறது. மேலும், இதில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளில் தேவையான திருத்தங்கள் மற்றும் அதையொட்டிய பிற ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன என்று அம்மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கை தெரிவிக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின்படி, அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் 'கேரளா' என்ற மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என மாற்றியமைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments