கிருஷ்ண குமாரி ராய் படம் | கிருஷ்ண குமாரி ராய் இன்ஸ்டா பதிவு
இந்தியா

சிக்கிம் முதல்வரின் மனைவி வெற்றி!

சிக்கிம் முதல்வரின் மனைவி கிருஷ்ண குமாரி ராய் நாம்ச்சி-சிங்கிதாங் தொகுதியில் வெற்றி பெற்றார்.

DIN

சிக்கிமில் மொத்தமுள்ள 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று(ஜூன் 2) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதில், பெரும்பான்மை இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி(எஸ்கேஎம்) வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், சிக்கிம் முதல்வரும், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சித் தலைவருமான பிரேம் சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ண குமாரி ராய் நாம்ச்சி-சிங்கிதாங் சட்டப் பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) வேட்பாளரான கிருஷ்ண குமாரி ராய், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் (எஸ்டிஎஃப்) பிமல் ராயை 5,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

நாம்ச்சி-சிங்கிதாங் சட்டப் பேரவைத் தொகுதியில் கிருஷ்ண குமாரி ராய் 7,605 வாக்குகளையும், பிமல் ராய் 2,605 வாக்குகளையும் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT