இந்தியா

2019 மாடலை தொடரும் திமுக, காங்கிரஸ்? ஆந்திரம், கர்நாடகத்தில் முன்னேறும் தேஜகூ!!

2019 மாடலை தொடரும் திமுக, காங்கிரஸ் என எதிர்பார்க்கப்படுகிறது.

DIN

சென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகத்தில் முன்னேறி வருகிறது. தமிழகத்தில் திமுகவும் கேரளத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலவரம், 2019 நிலவத்தையே தமிழகம், கேரளத்தில் மீண்டும் தொடரும் என்று கூறப்படுகிறது.

நடந்து முடிந்திருக்கும் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, கர்நாடகத்தில் 28 மக்களவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது. சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 15 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

மற்ற தொகுதிகளிலும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தில் திமுகவும், கேரளத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலைப் போன்றே இவ்விரு மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் அமையலாம் என்று கணிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT