கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி
கேஜரிவாலை கைது செய்து சிறையில் அடைக்கும் எண்ணம் பாஜக ஆளும் மத்திய அரசுக்கும் சம்மன் அனுப்பிய முதல் நாளிலேயே இருந்தது..
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத்துறையின் சதித்திட்டத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமித் ஷா தெளிவுபடுத்தியதாக அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
கேஜரிவாலுக்கு முதன்முறையாக சம்மன் அனுப்பியபோது அவரை கைது செய்வதற்காக அமலாக்கத்துறை செய்த சதித்திட்டம் எனச் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இவை அமலாக்கத்துறை அல்ல, பாஜவின் சம்மன்கள். பாஜகவின் 10 ஆண்டுக்கால தவறான ஆட்சியை கேஜரிவால் அம்பலப்படுத்துவார் என்று பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து சிறையில் அடைக்கும் எண்ணம் பாஜக ஆளும் மத்திய அரசுக்கும் அவர்களின் அமலாக்க அமைப்புக்கும் சம்மன் அனுப்பிய முதல் நாளிலேயே இருந்ததாக அமித் ஷா கூறினார்.
கேஜரிவாலை அழைத்து அவரை கைது செய்வதற்கான சாக்குப்போக்குதான் சம்மன்கள் என்று அமித்ஷா கூறியதாக அதிஷி செய்தியார்களுடன் சந்திப்பில் தெரிவித்தார்.