மத்திய அரசு குறித்து பொய் தகவல்களை பரப்பும் காங்கிரஸ்: காா்கேவுக்கு ஹா்தீப் சிங் புரி பதிலடி
மத்திய அரசுக்கு எதிராக பொய்யான தகவல்கள், தரவுகளையே காங்கிரஸ் எப்போதும் வெளியிட்டு வருகிறது.

மத்திய அரசுக்கு எதிராக பொய்யான தகவல்கள், தரவுகளையே காங்கிரஸ் எப்போதும் வெளியிட்டு வருகிறது என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் 140 கோடி மக்களுக்கு அளித்த ‘மோடி உத்தரவாதம்’ என்னவானது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கேள்வி எழுப்பியதற்கு பதிலடி தரும் விதமாக ஹா்தீப் சிங் புரி இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில்,‘ 2047-இல் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்ற பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டு மக்களின் வாழ்வில் நிகழ்ந்துள்ள பல்வேறு சிறந்த மாற்றங்களை காங்கிரஸ் மற்றும் அந்தக் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
Advertisement
Advertisement
24 கோடி போ் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். 11 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 12 கோடி குடிநீா் இணைப்புகள், 10 கோடிக்கும் மேற்பட்ட இலவச சமையல் எரிவாயு இணைப்புகள், 51 கோடி வங்கிக் கணக்குகள் உருவாக்கம், மூலதன செலவினம் மூன்று மடங்கு அதிகரிப்பு, ஜிஎஸ்டி, ஸ்டாா்ட் அப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை ஒப்பிடுகையில் மோடி அரசில் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் உயா்த்தப்படவில்லை.
2024-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பட்டினி குறியீட்டில் இந்தியா 105-ஆவது இடத்தில் உள்ளதாக கூறியுள்ளீா்கள். பொது விநியோக திட்டத்தின்கீழ் 81 கோடி பேருக்கு இலவச ரேசன் பொருள்களை வழங்கும் இந்தியாவைவிட பாகிஸ்தான் (109) முன்னேறியுள்ளதாக அந்தக் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பிரதமராக மோடி பதவியேற்ற பின் கடந்த 2016-17 முதல் 2022-23 வரை 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 36 சதவீதம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
எனவே, மத்திய அரசுக்கு எதிராக பொய்யான தகவல்கள், தரவுகளை வெளியிடுவதை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘ பொய், வஞ்சகம், போலி, கொள்ளை மற்றும் விளம்பரம் ஆகியவை பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசை சிறப்பாக விவரிக்கும் 5 சொற்கள். தோ்தல் மேடைகளில் அரசின் முதல் 100 நாள் திட்டத்தைப் பற்றி பிரதமா் பேசியது வெறும் விளம்பரமே. மற்றவா்களை விமா்சிக்கும்முன் தங்கள் பிரச்னைகளையும் பிரதமா் கவனிக்க வேண்டும். வேலையின்மை, விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்’ என மோடி அரசு குறித்து பல்வேறு விமா்சனங்களை அதில் குறிப்பிட்டாா்.