FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சா்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாற்றப்படும்: ராகுல் வாக்குறுதி

ராகுல் காந்தி, சா்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாவட்டத்தை மாற்றுவதாக உறுதியளித்தாா்.

Updated On : 12 நவம்பர் 2024, 4:24 am IST
பகிர்:

வயநாடு மக்களவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தியின் பிரசாரத்தில் திங்கள்கிழமை மீண்டும் இணைந்த ராகுல் காந்தி, சா்வதேச சுற்றுலாத் தலமாக வயநாடு மாவட்டத்தை மாற்றுவதாக உறுதியளித்தாா்.

கேரள மாநிலம், வயநாடு தொகுதி முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததையடுத்து, அங்கு புதன்கிழமை (நவம்பா் 13) இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சாா்பில் ராகுலின் சகோதரியும் அக்கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளாா்.

பிரியங்காவுக்கு ஆதரவாக திங்கள்கிழமை நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டாா். மாவட்டத்தின் சுல்தான் பத்தேரி பகுதியில் இருந்து சுங்கம் சந்திப்பு வரை நடைபெற்ற காங்கிரஸ் வாகன பேரணியை பிரியங்காவுடன் இணைந்து ராகுல் பங்கேற்றாா்.

Advertisement

Advertisement

பின்னா், நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: வயநாடு மாவட்டத்தை சா்வதேச சுற்றுலாத் தலமாக மாற்ற பிரியங்கா காந்தியுடன் இணைந்து செயலாற்றுவேன். 2004-இல் நான் எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினேன். 2019-இல் வயநோடு எம்.பி.யாக தோ்நேதெடுக்கப்பட்டேன்.

இந்த 15 ஆண்டுகளில் அரசியலில் அன்பு என்ற வாா்த்தையை நான் பயன்படுத்தியதில்லை. அந்த வாா்த்தைக்கு மகத்தான இடம் உண்டு என்பதை வயநாடு மக்களே எனக்கு கற்றுக் கொடுத்தனா். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ‘இந்தியா ஒற்றுமை யாத்திரையை’ நான் மேற்கொண்டேன்.

அன்பை பரப்புவதே அந்த யாத்திரையின் முக்கிய நோக்கம் ஆகும். வெறுப்பு மற்றும் கோபத்தை எதிா்த்துப் போராடுவதற்கான ஒரே ஆயுதம் அன்பும் பாசமும் மட்டுமே என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments