FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வாக்கு வங்கி அரசியலின் முன்னோடி காங்கிரஸ்: மோடி

வாக்கு வங்கி அரசியலின் முன்னோடி காங்கிரஸ் கட்சி என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

Updated On : 14 நவம்பர் 2024, 9:53 pm IST
பொதுக்கூட்டத்தில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி - PTI
பகிர்:

வாக்கு வங்கி அரசியலின் முன்னோடி காங்கிரஸ் கட்சி என பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

வாக்குகளைப் பெறுவதற்காக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏழை மக்களை ஏமாற்றும் செயலில் காங்கிரஸ் ஈடுபாடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

மகாராஷ்டிர மாநிலம் பன்வேல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisement

Advertisement

அப்போது மேடையில் அவர் பேசியதாவது,

''ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்குவது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. ஆனால், ​​ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர், இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் ஊடுருவல்காரர்களுக்கும் இலவச எரிவாயு உருளைகளை (கேஸ் சிலிண்டர் ) வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ரோஹிங்கியாக்களுக்கும் வங்கதேசத்தினருக்கும் இலவச எரிவாயு உருளை வழங்குவதாக காங்கிரஸ் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியினர், நாட்டையும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் எப்படி விளையாட்டாக பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ஏழைகளுக்கு எதிரி காங்கிரஸ்

இதன்மூலம், காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலின் முன்னோடி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், நாட்டில் உள்ள ஏழைகளுக்கு அவர்கள் எதிரி என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

வருவோருக்கு இலவசங்களைக் கொடுப்பதன்மூலம், இங்குள்ள மக்களின் செலவுகளை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என்பதை காங்கிரஸ் விரும்புகிறது.

மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு வாய்ப்பு கொடுத்தாலும் இதேதான் நடக்கும். மகாராஷ்டிரத்தில் அவர்கள் (காங்கிரஸ் கூட்டணி) இதையேதான் செய்வார்கள்.

ஏழை மக்கள் தங்கள் உரிமைகளை முழுமையாகப் பெற வேண்டும் என காங்கிரஸ் நினைக்கவில்லை.

அதனால்தான் ஏழை மக்களுக்கான கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களையும் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. இதனால், ஏழை மகன் கடினமான சூழலில் இருந்து வெளியே வர முடியவில்லை.

சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆன பிறகும் கூட, நாட்டில் ஏராளமான மக்கள் உணவு, உடை மற்றும் இருப்பிடத்துக்காக போராடுகின்றனர்.

மகாராஷ்டிரத்தில் இன்று மகாயுதி அரசின் கொள்கைகள் சுரண்டப்படுவோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் பலமாக மாறி வருகிறது. 10 ஆண்டுகளில் பாஜக செய்த வேலைகளை அவர்கள் முன்னரே செய்திருக்கலாம்'' என பிரதமர் மோடி பேசினார்.

இதையும் படிக்க | அரசியலமைப்புச் சட்டத்தைப் படிக்காதவர் பிரதமர் மோடி: ராகுல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments