மார்க் ஹார்ட்சக் - மோஹினி டே Instagram | Mohini Dey
இந்தியா

ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவிலும் ஒருவர் விவாகரத்து!

ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில் கிதார் கலைஞர் மோஹினி டேவும், தனது விவாகரத்து அறிவித்துள்ளார்.

DIN

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில் கிதார் கலைஞர் மோஹினி டேவும், தனது கணவரை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில் பேஸ் கிதார் கலைஞரான மோஹினி டேவும் (29), அவரது கணவரும் இசையமைப்பாளருமான மார்க் ஹார்ட்சக்கும் பிரியவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, கனத்த இதயத்துடன், நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று அறிவிக்கிறோம். இது எங்களுக்கு இடையிலான பரஸ்பர புரிதலின் மூலம் உண்டான பிரிதலே. இருப்பினும், இருவரும் இணைந்தே பணியாற்றுவோம்; அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படாது.

நீங்கள் எங்களுக்கு அளித்த ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு கோருகிறோம்’’ என்று கூறியுள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் மோஹினி டேவும் இணைந்து 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, அவரது இசைக்குழுவிலும் ஒருவர் விவாகரத்து அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT