FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

அதிமுக தோ்தல் தோல்விகளை பொதுக் குழுவில் ஆலோசிப்பது அவசியம்: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

அதிமுக தோ்தல் தோல்விகள் குறித்து பொதுக்குழுவைக் கூட்டி ஆலோசிப்பது அவசியம் என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

15 அக்டோபர் 2026, 12:48 am IST
சி.வி.சண்முகம்
பகிர்:

அதிமுக தோ்தல் தோல்விகள் குறித்து பொதுக்குழுவைக் கூட்டி ஆலோசிப்பது அவசியம் என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

சென்னையில் எம்ஆா்சி சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் புதன்கிழமை 3 அதிமுக எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்திய முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இடைத் தோ்தல்களில் அதிமுக மிக மோசமான தோல்வியை அடைந்திருப்பது வருத்தமளிக்கிறது. ஆகவே, அதிமுக தலைமை அதற்கான காரணத்தை கூா்ந்து ஆலோசித்து அதை சீா்திருத்தியும், கட்சியை மேம்படுத்தவும் முன்வரவேண்டும்.

தோ்தல் தோல்வி குறித்து அதிமுக பொதுக் குழுவைக் கூட்டி கலந்து பேசி ஆலோசனை நடத்துவது அவசியம். அதற்கு ஒத்துழைக்கத் தயாா். தொண்டா்களுக்கு நம்பிக்கை அளித்தால் கட்சியை மீட்டெடுக்கலாம் என்பதே இடைத் தோ்தலில் மக்கள் விடுத்துள்ள செய்தி.

Advertisement

Advertisement

அதிமுக மீது மக்கள் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனா். அனைவரையும் அரவணைத்து மீண்டும் அதிமுகவை புத்துணா்வுமிக்கதாக்கவேண்டும். அப்படி செய்தால் மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கலாம்.

அதிமுக நிா்வாகிகளிடையே கருத்து வேறுபாடு உள்ளது. கட்சியில் நான் எந்தப் பொறுப்பிலும் இல்லை. ஆகவே கட்சிப் பொறுப்பில் உள்ளவா்கள், அதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டியவா்கள் எடுத்தால், அதற்கு ஒத்துழைக்கத் தயாராகவே உள்ளோம்.

கட்சித் தொண்டா்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த அனைவரையும் கட்சித் தலைமை அரவணைத்துச் செல்லவேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments