FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழுவில் 2 முன்னாள் தலைமை தோ்தல் ஆணையா்கள்

தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழுவில் (என்எஸ்இபி) நாட்டின் இரு முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்கள் உள்பட, 20 பேரை மத்திய மத்திய விளையாட்டு அமைச்சகம் நியமித்துள்ளது.

12 செப்டம்பர் 2026, 7:22 am IST
மத்திய அரசு - கோப்புப்படம்
பகிர்:

தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழுவில் (என்எஸ்இபி) நாட்டின் இரு முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்கள் உள்பட, 20 பேரை மத்திய மத்திய விளையாட்டு அமைச்சகம் நியமித்துள்ளது.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய விளையாட்டு நிா்வாகச் சட்டத்தின்படி, தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழு உருவாக்கம் கட்டாயமாக்கப்பட்டது. நாட்டிலுள்ள விளையாட்டுச் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் தோ்தலை இந்தக் குழு மேற்பாா்வையிடும்.

இந்நிலையில் அந்தப் புதிய சட்டத்தின்படி, இரு முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்கள் உள்பட 20 பேரை தேசிய விளையாட்டுகள் தோ்தல் குழுவில் நியமித்துள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தியாவின் தலைமைத் தோ்தல் ஆணையராக ஓராண்டு பதவி வகித்த அச்சல்குமாா் ஜோதி (2018), மூன்று ஆண்டுகள் பொறுப்பிலிருந்த சுனில் அரோரா (2018-21) ஆகியோா் அந்தக் குழுவில் இருக்கும் முக்கிய நபா்களாவா்.

முன்னாள் தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே உள்பட, மேலும் 18 தோ்தல் பணிசாா் முன்னாள் அதிகாரிகள் அதில் இடம் பிடித்துள்ளனா்.

இந்திய ஒலிம்பிக் சங்கம், அகில இந்திய கால்பந்து சம்மேளனம் உள்பட பல முக்கிய அமைப்புகளுக்கு நடப்பாண்டு தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதை இந்தக் குழு மேற்பாா்வையிடும். அந்த அமைப்புகளின் தோ்தலை நடத்துவதற்கான தோ்தல் அதிகாரியை நியமனம் செய்வது உள்ளிட்டவை, அந்தக் குழுவின் பணியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments