FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

பயன்தரும் பாரம்பரிய விளையாட்டுகள்

வீடியோகேம் விளையாடாத குழந்தைகள் இன்று இல்லை.

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 4:01 am IST
பகிர்:

வீடியோகேம் விளையாடாத குழந்தைகள் இன்று இல்லை.

வீடுகளில், பயணங்களில், காத்திருக்கும் நேரங்களில் எல்லாம் சிறுவர்கள் தலைவணங்கி, இரண்டு விரல்களால் சித்திரநாயகர்களை விரட்டிக் கொண்டிருப்பார்கள். அல்லது வண்ணப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருப்பார்கள்.

சுமார் கால் நுôற்றாண்டுக்கு முந்தைய குழந்தைகள் இந்த வீடியோ கேம் அறியாதவர்கள். குறிப்பாக, ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் சாதாரண தெருவிளையாட்டு, கால்பந்து, ஒளிந்து கொண்டால் கண்டுபிடி போன்ற விளையாட்டுகள்தான் அப்போது இருந்தன. அது தவிர, பல்லாங்குழி, ஐந்துகல் ஆட்டம், ஆடுபுலி, பரமபதம், தாயம் போன்ற ஆட்டங்கள் அன்றைய உள்ளரங்க விளையாட்டுகளாக இருந்தன.

Advertisement

Advertisement

பல்லாங்குழி ஆட்டம் வெறுமனே காய்களை குழியில் போடுவது என்பதாக இல்லை. எந்தக் குழியில் இருக்கும் காய்களை எடுத்து ஆடினால், எதிரணியில் இருப்பவரின் காய்களை அள்ள முடியும் என்ற கணக்குகள் உண்டு. இந்த மனக்கணக்கு சிறுவர்களின் கணித ஆற்றலுக்கு அடிப்படையாக இருந்தது. அதேபோன்று தாயம். அதிலும் காய்நகர்த்தல் என்பது சிந்தனைத் திறனுக்கு உட்பட்டது. ஆடுபுலி ஆட்டமும் அதேபோன்றதுதான். ஐந்துகல் ஆட்டம் கைகளுக்கும் கண்ணுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு என்று கூறப்படுகிறது.

பரமபதம் ஆட்டம் திடீர் சோதனைகளால் மனம் தளராத உணர்வு பயிற்சிக்கு வழிவகுத்தது. திடீரென பாம்பில் சறுக்கி கீழே விழ நேரிடும். அதேபோன்று திடீரென ஏணிகளிலும் ஏறி, மேலே உயரலாம். வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் நடக்கும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏதோஒன்று நம்மை துôக்கிவிடும் என்கிற நம்பிக்கையை இந்த விளையாட்டுகள் வழங்கின.

இந்த விளையாட்டுகள் எல்லாம் எவ்வாறு அறிவுத்திறன் வளர்ச்சிக்கு உதவுகின்றன என்ற ஆய்வைத் தொடங்கியுள்ளது சென்னை விஐடி பல்கலைக்கழகம். இங்கு கணினித் துறை மாணவர்கள் வகுப்பறையிலும், ஆய்வுக்கூடத்திலும் இந்த விளையாட்டுகளை விளையாடுவார்கள்.

மத்திய கல்வித் துறையின் ஒரு பிரிவான இந்திய அறிவு மையத்துடன் இணைந்து இந்தப் பாரம்பரிய விளையாட்டுகள் எவ்வாறு சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்கு பெரும் பயனாக அமைந்தன என்பதை ஆய்வு செய்வார்கள் என்று இந்தப் பல்கலைக்கழக உளவியல் பிரிவின் பேராசிரியர் விஜயா பானு கூறியுள்ளார்.

நவீன அறிவியல் பார்வையில் பாரம்பரிய விளையாட்டுகளை பொருத்திப் பார்ப்பதும், நாம் இதுவரை பேசப்படாத அதன் பயன்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும்தான் இந்த முயற்சியின் நோக்கம் என்கிறார்.

இந்த விளையாட்டுகளுக்கு டிஜிட்டல் திரை தேவையில்லை. மின்சாரம் தேவையில்லை. இவற்றை விளையாடுவதும் எளிது. இந்த விளையாட்டு குழந்தைகளை அடிமைப்படுத்துவதும் இல்லை.

இவற்றை கல்லுôரிகள் ஆய்வுக்காக விளையாடினால், நாம் மீண்டும் வீட்டில் விளையாடலாமே..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments