FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அரசின் ஆதரவு இல்லாததால் பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்ற நடிகை!

நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நடிகை, அரசின் ஆதரவு இல்லாததால் புகாரை வாபஸ் பெற்றார்.

Updated On : 22 நவம்பர் 2024, 3:48 pm IST
நடிகர் முகேஷ் - கோப்புப் படம்
பகிர்:

நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நடிகை, அரசின் ஆதரவு இல்லாததால் புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலையாள திரையுலகின் பல்வேறு நடிகா்கள், இயக்குநா்கள் மீது பாலியல் வழக்குகள் பதிவாகின. வடக்கன்சேரி, மாராடு ஆகிய இரு காவல் நிலையங்களில் ஆளுங்கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்எல்ஏ முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் 376-ஆவது பிரிவின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில், முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த நடிகை ஒருவர், அந்த புகாரைத் திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளார். அரசின் ஆதரவு தனக்கு இல்லாததே, இந்த வழக்கில் இருந்து பின்வாங்குவதற்கான காரணம் என்று புகாரளித்த நடிகை விவரித்துள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், அவர் கூறியதாவது "ஒருமுறை, நான் கழிப்பறையிலிருந்து வெளியே வந்தபோது, நடிகர் ஜெயசூர்யா என்னை பின்னால் இருந்து கட்டிப்பிடித்து, வலுக்கட்டாயமாக முத்தமிட்டார். அதுமட்டுமின்றி, எடவேல பாபு என்னுடன் பாலியல் உறவுக்கு வற்புறுத்தினார்" என்று தெரிவித்தார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு மலையாள நடிகை தொடா்புடைய வழக்கில், மலையாள திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளைப் பற்றி விசாரிக்க நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவை கேரள அரசு அமைத்தது. இக் குழுவின் அறிக்கை கடந்த மாதம் வெளியானதைத் தொடா்ந்து, மலையாள திரையுலகைச் சோ்ந்த பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments