FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு எப்போது? ராகுல் பங்கேற்பாரா?

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்

Updated On : 24 நவம்பர் 2024, 1:10 pm IST
ராகுல் காந்தி - ஹேமந்த் சோரன் - கோப்புப் படம்
பகிர்:

ஜார்க்கண்ட் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமையில் (நவ. 26) முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன; இருப்பினும், அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, மமதா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவால், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட்) ஆகிய உள்ளடக்கிய கூட்டணி, மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்தியா கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது. மேலும், ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - 34

காங்கிரஸ் - 16

ராஷ்டிரிய ஜனதா தளம் - 4

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட்) - 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments