முதல்வர் சதீசன் கான்வாயை வழிமறிக்க முயற்சி! கருப்புக்கொடி போராட்டம்!
முதல்வர் சதீசன் கான்வாயை வழிமறிக்க முயற்சி பற்றி..
கேரள முதல்வர் வி.டி. சதீசனின் வாகன அணிவகுப்புக்கு எதிராக பாஜக மற்றும் யுவ மோர்ச்சா கட்சியின் பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் சதீசன் இன்று காலை முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், மட்டானூர் வழியாகச் சென்ற முதல்வர் சதீசனின் வாகன அணிவகுப்பை வழிமறித்து, சாலையோரத்தில் கூடியிருந்த பாஜக மற்றும் யுவ மோர்ச்சா கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர்.
எனினும், போராட்டத்தை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்த காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததால், போராட்டக்காரர்களால் வாகன அணிவகுப்பைத் தடுக்க முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
Advertisement
Advertisement
பெண் காவலர்கள் இல்லாத சூழலில், பெண் பாஜக கட்சியினரை ஆண் காவலர்களே தடுத்து நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது கண்ணூர் நகரம் மற்றும் தானா ஆகிய இடங்களிலும் சதீசனின் வாகன அணிவகுப்புக்கு எதிராக யுவ மோர்ச்சா கட்சியினர் இதேபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு முதல்வருக்கான பாதுகாப்பை காவல்துறை பலப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 26 அன்று, கொல்லத்திலிருந்து குந்தாராவுக்கு அமித் ஷாவின் வாகன அணிவகுப்பு சென்றுகொண்டிருந்தபோது, இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு எதிராகக் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமித் ஷா கொல்லம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதற்குப் பதிலடியாக, ஞாயிற்றுக்கிழமையன்று கோழிக்கோடு, கொல்லம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தனித்தனி நிகழ்வுகளில், காங்கிரஸ் தலைவி பிரியங்கா காந்தி வத்ரா, கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பி.சி. விஷ்ணுநாத் ஆகியோரின் வாகன அணிவகுப்புகளுக்கு எதிராக பாஜக மற்றும் யுவ மோர்ச்சா கட்சியினர் கருப்புக்கொடி காட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.