FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஏஐ விடியோவை நீக்கக் கோரியது நாங்கள் அல்ல: விடி சதீசன் விளக்கம்!

ஏஐ விடியோவை நீக்கக் கோரியது நாங்கள் அல்ல என கேரள முதல்வர் விடி சதீசன் தெரிவித்தது குறித்து...

16 செப்டம்பர் 2026, 4:06 pm IST
வி.டி. சதீசன் - கோப்புப் படம்
பகிர்:

ஏஐ விடியோவை நீக்கக் கோரியது நாங்கள் அல்ல என கேரள முதல்வர் விடி சதீசன் புதன்கிழமை (செப். 16) தெரிவித்தார்.

கேரளத்தில் அதிக மின்வெட்டுகள் நேரிடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், மாநில முதல்வர் வி.டி. சதீசன், மின்சாரத் துறை ஊழியர்கள் பின்னணியில் இருந்து குழு நடனமாடுவது போன்ற செய்யறிவால் உருவாக்கப்பட்ட விடியோ வைரலாகி வந்தது.

அந்த விடியோ குறித்து கருத்து தெரிவித்த விடி சதீசன், “நடிகர் மோகன்லால், என்னுடைய நண்பரும் தமிழக முதல்வருமான விஜய்யை விடவும், நான் சிறப்பாக நடனமாடுகிறேன்” எனக் கூறியிருந்தார்.

Advertisement

Advertisement

இருப்பினும், குறிப்பிடப்படாத ஒரு புகாரின் அடிப்படையில் மெட்டா நிறுவனம் அந்த விடியோவை நீக்கியது. இதுகுறித்து விடி சதீசன் பேசுகையில், “என் சார்பிலோ என்னுடைய அலுவலகம் சார்பிலோ அந்த விடியோவை நீக்கக் கோரி, எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை.

மாறாக, அந்த விடியோவை நான் ரசித்தேன். நான் ரசித்ததால்தான் அது குறித்து பொது வெளியிலும் பேசியிருந்தேன். மேலும், அந்த விடியோவை பார்க்க முடியாது என்பது எனக்கும் சோகமாகத்தான் உள்ளது” என்று தெரிவித்தார்.

summary

Kerala Chief Minister V.D. Satheesan stated on Wednesday (Sept. 16) that it was not they who requested the removal of the AI ​​video.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments