FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்: இருவர் சுட்டுக் கொலை!

மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் அட்டகாசம் பற்றி..

Updated On : 25 நவம்பர் 2024, 1:29 pm IST
சுட்டுக் கொலை
பகிர்:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குத்ரி தொகுதிக்கு உள்பட்ட கிரு கிராமத்தில் போலீஸார் குழு விரைந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் தெரிவித்தார்.

இறந்தவர்களில் ஒருவர் ரவி பான் என அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

கிராமத்திலிருந்து மேலும் இருவர் இடதுசாரி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தொலைதூரப் பகுதியில் நெட்வொர்க் பிரச்னை காரணமாக போலீஸார் குழுவைத் தொடர்பு கொள்ள முடியாததால் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றார்.

போலீஸ் குழு கிராமத்திலிருந்து திரும்பிய பிறகு சம்பவம் பற்றிய விவரங்கள் கிடைக்கும் என்று எஸ்பி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments