முகப்பு
இந்தியா

ரசிகரைக் கொலை செய்த வழக்கு: நடிகர் தர்ஷனுக்கு நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு!

பெல்லாரி சிறையிலுள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

Updated On : 9 செப்டம்பர் 2024, 7:00 pm IST
கன்னட நடிகர் தர்ஷன்
பகிர்:

கன்னட நடிகா் தா்ஷன் தனது ரசிகா் ரேணுகாசாமியை(34) கொலை செய்த வழக்கில், தர்ஷன் மற்றும் அவரது தோழி நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ஷன் தூகுதீபா சிறை வளாகத்தில் திறந்தவெளியில் நாற்காலியில் அமர்ந்தபடி கையில் சிகரெட்டை பிடித்தபடி தேநீர் பருகும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவருக்கு அருகே ரௌடி வில்சன் கார்டன் நாகா மற்றும் தர்ஷனுடைய மேலாளாராக பணிபுரிந்த நாகராஜ் ஆகியோர் அமர்ந்துகொண்டு அரட்டையடிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

Advertisement

Advertisement

இதையடுத்து தர்ஷன் சிரை மாற்றப்பட்டுள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து பெல்லாரி சிறைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பெங்களூரில் உள்ள 24-வது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தர்ஷ்னுடன் சேர்த்து ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரும் சிறையிலிருந்தபடியே, காணொலிக் காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடிகர் தர்ஷனுக்கு நீதிமன்றக் காவல் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை நீட்டித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருடன் சேர்த்து ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 16 பேருக்கும் இம்மாதம் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ரேணுகாசாமி கொலை வழக்கில் 3,991 பக்க முதல்கட்ட குற்றப்பத்திரிகையை கடந்த வாரம் தாக்கல் செய்தது காவல்துறை. இதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் தர்ஷன். அதில் குற்றப் பத்திரிகையில் பதிவாகியுள்ள தகவல்களை பொதுவெளியில் ஊடகங்கள் வெளியிட தடை விதிகக் அறிவுறுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments