அகில இந்திய மகளிர் காங்கிரஸுக்கு புதிய தலைவர் பொறுப்பேற்பு!
அகில இந்திய மகளிர் காங்கிரஸின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அல்கா லம்பா காங்கிரஸ் தலைமையகத்தில் பொறுப்பேற்றார்.
அகில இந்திய மகளிர் காங்கிரஸின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அல்கா லம்பா காங்கிரஸ் தலைமையகத்தில் பொறுப்பேற்றார்.
அல்கா லம்பா இன்று (ஜனவரி 10) புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அகில இந்திய மகளிர் காங்கிரஸின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றார்.
மகளிர் காங்கிரஸின் முந்தைய தலைவரான நெட்டா டிஸோசா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகம் நிராகரிப்பு: பாஜக தலைவர் பதில்!
அதையடுத்து அவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி கூறினார்.
முன்னதாக ஜன.5-ஆம் தேதி மகளிர் காங்கிரஸின் தலைவராக அல்கா லம்பாவும், மாணவர் சங்கத்தின் தலைவராக வருண் சௌதரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் அறிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.