முகப்பு
இந்தியா

கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: மாயாவதி கோரிக்கை

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

Updated On : 24 ஜனவரி 2024, 5:56 pm IST
மாயாவதி (கோப்புப்படம்)
பகிர்:

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

பிகாா் மாநில முன்னாள் முதல்வர் கா்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக குடியரசுத் தலைவா் மாளிகை செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த கோரிக்கையையும் வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது, “சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய மகத்தான தலைவர் கர்பூரி தாக்குரின் 100வது பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்.

அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கும் மத்திய அரசின் தாமதமான முடிவினை வரவேற்கிறேன். 

இதேபோல தலித் மக்களின் சுயமரியாதைக்காக போராடிய கன்ஷிராமின் பங்களிப்பும் மறக்க முடியாதது. அவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பமாகும்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments