முகப்பு
இந்தியா

சண்டீகர் மேயர் தேர்தல்: ‘இந்தியா’ கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என்ற அறிவிப்பால் பாஜக வெற்றி

சண்டீகர் மேயர் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என்ற அறிவிப்பால் பாஜக வெற்றி பெற்றது.

Updated On : 30 ஜனவரி 2024, 4:35 pm IST
பகிர்:

சண்டீகர் மேயர் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது என்ற அறிவிப்பால் பாஜக வெற்றி பெற்றது.

சண்டீகர் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரை தேர்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியின் கீழ் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் இணைந்து பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டது. பாஜகவை சேர்ந்த மனோஜ் சோங்கரும், ஆம் ஆத்மியை சேர்ந்த குல்தீப் குமாரும் மேயர் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

Advertisement

Advertisement

இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பிற்பகல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

மொத்தமுள்ள 36 உறுப்பினர்களில் இந்தியா கூட்டணியின் 8 உறுப்பினர்களின் வாக்குகள் செல்லாது என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதனால், பாஜக 16 வாக்குகள், இந்தியா கூட்டணி 12 வாக்குகள் பெற்று, பாஜகவின் மனோஜ் சோங்கர் மேயராக தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தேர்தல் நடத்தும் அதிகாரி, வாக்குச்சீட்டில் பேனாவைக் கொண்டு எழுதும் காணொலி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments