பஹல்காம் தாக்குதல்: உச்ச நீதிமன்றம் மௌன அஞ்சலி
பஹல்காம் தாக்குதலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய பெஹல்காம் தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, இந்தியாவின் கிரீடமாகவும் மற்றும் இயற்கை அழகும் கொண்ட நகரில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் புனிதத்தன்மைக்குமான அவமரியாதை. இதனை நீதிமன்றம் கடுமையாகக் கண்டிக்கிறது.
மனசாட்சியற்ற வன்முறையின் இந்த கொடூரமான செயல், அனைவரின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. மேலும், பயங்கரவாதத்தின் மிருகத்தனத்தையும் மனிதாபிமானமற்ற தன்மையையும் காட்டுகிறது என்று கூறியது.
Advertisement
Advertisement
தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். அவர்களுடன் தேசம் என்றும் உடனிருக்கும் என்று இரங்கலும் தெரிவித்தது.
இதனையடுத்து, இந்த சம்பவத்தில் உயரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.