இல.கணேசன் மறைவு: மணிப்பூர் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!
மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு!
நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்த இல. கணேசன் மறைவைத் தொடர்ந்து, மணிப்பூர் ஆளுநருக்கு நாகாலாந்து ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்தவரும் பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆக. 15 மாலை காலமானார்.
மறைந்த இல.கணேசனின் உடலுக்கு இல.கணேசன் உடலுக்கு 42 குண்டுகள் 3 முறை முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தியபின், சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் சனிக்கிழமை(ஆக. 16) தகனம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் சனிக்கிழமை(ஆக. 16) உத்தரவிட்டுள்ளார்.
President of India has appointed Ajay Kumar Bhalla, Governor of Manipur, to discharge the functions of the Governor of Nagaland
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.