ஜம்முவில் ஆக.30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
ஆக. 30 வரை ஜம்முவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக ஆக. 30 வரை ஜம்முவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவில் கடந்த சில நாள்களாக கனமழை தொடர்ந்து வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில்,
Advertisement
Advertisement
ஜம்முவில் பல பகுதிகளில் அதி கனமழை தொடர்வதால் மாணவர்களின் நலன் கருதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளுக்கும் ஆகஸ்ட் 30 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரப்பூர்வ செனல்களின் மூலம் அவ்வப்போது தகவல்களை தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Holidays have been declared for schools in Jammu till August 30 due to continuous heavy rains.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.