சத்தீஸ்கரின் 39 மாவோயிஸ்டுகள் தெலங்கானாவில் சரண்!
சத்தீஸ்கரின் 39 மாவோயிஸ்டுகள் தெலங்கானாவில் சரணடைந்துள்ளது குறித்து...
சத்தீஸ்கரில், செயல்பட்டு வந்த 39 மாவோயிஸ்டுகள் உள்பட 41 பேர் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் 39 பேர் உள்பட 41 மாவோயிஸ்டுகள் தெலங்கானா காவல் துறை உயர் அதிகாரி பி. ஷிவதார் ரெட்டி முன்னிலையில் இன்று (டிச. 19) சரணடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகள் நவீன ரக துப்பாக்கிகள் உள்பட 24 ஆயுதங்களை, பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சரணடைந்துள்ள மாவோயிஸ்டுகளின் பதவிகளுக்கு ஏற்ப அவர்களின் மறுவாழ்விற்காக அரசு திட்டங்களின் கீழ் தலா ரூ.5 லட்சம், ரூ.4 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மறுவாழ்வு நிதிகளில் இருந்து ரூ. 1.47 கோடி சரணடைந்துள்ள 41 மாவோயிஸ்டுகளுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து மாவோயிஸ்டுகளும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
In Chhattisgarh, 41 people, including 39 active Maoists, have surrendered to the Telangana police.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.