FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

40 மணி நேரம் கை, கால்களில் விலங்கு; கழிப்பறைக்குக்கூட அனுமதி இல்லை; இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? - காங்கிரஸ்

இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி 2025, 2:03 pm IST
கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது குறித்து இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"இந்திய மக்கள் 7.25 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறந்த வாழ்க்கையைத் தேடி அமெரிக்கா சென்றனர். பிரதமர் மோடி அரசு, ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாக்குறுதியை நிறைவேற்றாததாலும், நாட்டில் 40% வேலையின்மை இருப்பதாலும் அவர்கள் தங்கள் குடும்பங்களுக்காகச் சம்பாதிக்க அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது.

Advertisement

Advertisement

தற்போது இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் 40 மணி நேரம் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தனர். அவர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்தது. கப்பல்களில் கன்டெய்னரில் ஏற்றப்பட்ட அவர்கள், கழிப்பறைகளைப் பயன்படுத்தக்கூட அனுமதிக்கப்படவில்லை. இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? பாஜக அரசு ஏன் அமைதியாக இருக்கிறது?

ஆயிரக்கணக்கான இந்திய சகோதர, சகோதரிகள் அமெரிக்க தடுப்பு மையங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி இங்கு கொண்டு வரப்படுவார்கள்?

'அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பங்களித்துள்ளனர், அவர்கள் அமெரிக்காவீல் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்' என்று பிரதமர் மோடியால் ஏன் சொல்ல முடியவில்லை?

குறைந்தபட்சம் அவர்களை மரியாதையுடன் இங்கு அழைத்து வந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments