FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

7 பிப்ரவரி 2025, 12:41 am IST
பகிர்:

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது.

இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பினாகா ராக்கெட் ஏவும் அமைப்புகளை கொள்முதல் செய்வதற்காக, எகனாமிக் எக்ஸ்ப்ளோசிவ் லிமிடெட் (இஇஎல்) மற்றும் மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் (எம்ஐஎல்) ஆகியவற்றுடன் பாதுகாப்பு அமைச்சகம், மொத்தம் ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களில் கையொப்பமாகின.

சக்தி மென்பொருள் மேம்பாட்டிற்கு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) நிறுவனத்துடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

பாதுகாப்புச் செயலாளா் ராஜேஷ்குமாா் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

துல்லியமான மற்றும் நீண்ட தூர தாக்குதல்களை செயல்படுத்தவும், இந்திய ராணுவத்தின் வலிமையை மேலும் வலுப்படுத்தவும் இந்த ஒப்பந்தங்கள் முக்கிய பங்கு வகிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments